Wednesday, June 2, 2010

சிரிப்புகள்

1. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
– எக்ஸாம் ஹாலில்……!

2.வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!

3.வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

4.கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

5.அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" (ஓ) போட்டாங்க...

6.நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

7.நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

No comments: