Wednesday, June 2, 2010

தத்துவம் பகுதி 1

1.நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே

2.துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.

3.முடியாது முடியாது.. சில விஷயத்தை மாத்த முடியாது காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது. கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது. கோல மாவில் தோசை சுட முடியாது. வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.

4.உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன்... என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?

5.வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல. வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்.

6"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்....துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்....துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்....துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

7.நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை. கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????

8.ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைப் பார்த்துச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது. ஏன்? ஏன்? ஏன்? கொழுப்பு....

9.மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ... மழைல ஷ்ரேயா ஆடுனாங்க.. வெயில்ல பாவனா ஆடுனாங்க. உங்களோட பொதுஅறிவை இன்னும் வளர்த்துக்கணும்...

10.சிக்கன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

11.நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா ஆ) காக்காவா உடனடியா பதில் தேவை......!

12.நான் ஏன் உன்னை நினைக்கிறேன்..? உன் கூட பேசுறேன்....? உனக்கு மெஸேஜ் அனுப்புறேன்...? அதையேன் நீ படிக்கிறாய்...? ஏன்னா..... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை....

No comments: