Monday, July 11, 2016

Nice ஜோக்ஸ் 19


நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

 
அப்பா :- ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா ..
பையன் :- ஆண்டவா!எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு ...

 
பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க
ஏன் தெரியுமா ?
மணி பாக்கத்தான் .....................

 
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.


டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் டீச்சர்...
டீச்சர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...
டீச்சர் : ??

 
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல
ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ?????
 

டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி , அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!
டாக்டர் : ?????

 

Sunday, July 10, 2016

Tower of Pisa




Italic font -டை press பண்ணினால் அந்த எழுத்து சாய்வாக வரும் இதன் காரணம் இப்பொழுது புரிகிறதா.

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.



மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.


மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?



கணவன்: Access not allowed.



மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?



கணவன்: Bad command or file name



மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....



கணவன்: erroneous syntext



மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.



கணவன்: access denied



மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?



கணவன்: wrong password



மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்



கணவன்: data mismatch



மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது



கணவன்: by default



மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்



கணவன்: virus detedted



மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?



கணவன்: too many parameters



மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி



கணவன்: press contl, alt & del



மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.



கணவன்: illegal operation, system shuts down



மனைவி: நான் தொலஞ்சு போறன்.



கணவன்: reboot



மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்



கணவன்: change user