Monday, June 14, 2010

ஹி...ஹி...ஹி சிரிப்பு

1.ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"


2.உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’
‘’ஏன்?’’
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’


3.Bus போனாலும் Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்


4.Train எவ்வளவு வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாக தான் வரும்


5.Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை
ஒடைஞ்சா தான் Omelet போடமுடியும்


6.ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள
வித்தியாசம். நீங்ககூடத்தான் போன வாரம் ஒரு நாள்
வரல,நான் ஏன்னுக் கேட்டேன்னா?


7.அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும்
இருக்கலாம்,இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.


8.சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.



9.ராமு : என் மக‌ன் ராஜாவா இரு‌க்க வே‌ண்டியவ‌ன்...
சோமு : எப்படி?
ராமு : முத‌ல்ல அவனு‌க்கு ராஜா‌ன்னுதா‌ன் பெய‌ர் வை‌ச்சோ‌ம்.
அப்புறம்தா‌ன் மா‌த்‌தி‌ட்டோ‌ம்.
சோமு : ?!?!?!?


10.புது மானேஜர் 'வள்ளு' 'வள்ளு' விழுறாரே, முன்னாடி எந்த ஊரிலே வேலை பார்த்தாரு?
'ராஜபாளையம்'!!!!!


11.தொண்டர்: நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?
தலைவரின் செயலர்: வேலூரா? பாளையங்கோட்டையா?
தொண்டர்: ???


12.கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!

No comments: