Monday, November 1, 2010

காமெடி நேரம் 2

1.முனாறு பார்த்து இருக்கீங்களா ? இல்லையா ? நான் காட்டவா?

666 என்ன ஓகே வா ......

2.அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்
சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'
'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்
மின்சாரமே கனவு!'

3.டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே

4.எத்தனை இட்லி சாப்புடுவீங்க?
நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க?
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார்.

நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.


5. ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

6.முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

7.காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....

8.அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

9.தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

10.அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

11.பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

12. எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?


13..ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....


14.எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...

காமெடி நேரம் 1

1.வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

2.பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!

3.நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

4.கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்

5.வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

6.பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

7.மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

8.ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்

9.பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே .

10.மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் : எனக்கு மறந்து போச்சு
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

11.பேரன் : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
தாத்தா : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
பேரன் : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.


12.குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

13.வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

14.எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"