Monday, July 11, 2016

Nice ஜோக்ஸ் 19


நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !

 
அப்பா :- ஆண்டவன் கிட்ட எனக்கு நல்ல புத்தியக் கொடுன்னு வேண்டிகடா ..
பையன் :- ஆண்டவா!எங்கப்பாவுக்கு நல்ல புத்தியக் கொடு ...

 
பொதுவா ஆண்கள் இடதுகைல வாட்ச் கட்டுவாங்க பெண்கள் வலதுகைல வாட்ச் கட்டுவாங்க
ஏன் தெரியுமா ?
மணி பாக்கத்தான் .....................

 
கண்டக்டர்: யோவ், டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீ வேற..!.


டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு... அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100 ரூபாயா கொடுக்குறாரு... இந்த கணக்கு சரியா?? தப்பா...??
மாணவன் : சரி தான் டீச்சர்...
டீச்சர் : எப்படி ??
மாணவன் : நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்ல... டீச்சர்...
டீச்சர் : ??

 
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல
ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ?????
 

டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி , அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!
டாக்டர் : ?????

 

Sunday, July 10, 2016

Tower of Pisa
Italic font -டை press பண்ணினால் அந்த எழுத்து சாய்வாக வரும் இதன் காரணம் இப்பொழுது புரிகிறதா.

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.


மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?கணவன்: Access not allowed.மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா?கணவன்: Bad command or file nameமனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க....கணவன்: erroneous syntextமனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன்.கணவன்: access deniedமனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?கணவன்: wrong passwordமனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்கணவன்: data mismatchமனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாதுகணவன்: by defaultமனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்கணவன்: virus detedtedமனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?கணவன்: too many parametersமனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதிகணவன்: press contl, alt & delமனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.கணவன்: illegal operation, system shuts downமனைவி: நான் தொலஞ்சு போறன்.கணவன்: rebootமனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும்கணவன்: change user


Thursday, October 16, 2014

Nice ஜோக்ஸ் 18

1.  டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
     எந்த பாட்டுக்கு?

 
2.டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

 
3.காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?


4.குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!


5.இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

 
6.சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி..
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

 
7.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே  பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

 

8"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"
ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க

9.மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

10.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?

 
11.ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

 
12."ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"


13.வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!
ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?


14.நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"