Sunday, May 23, 2010

சிரிப்பு வெடி

1.சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே?
ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?

2.ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

3.ஆசிரியர்: கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?
மாணவன்: சொரிந்து விடலாம் சார்!!!

4.ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

5.தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?
வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.

6."யோவ் கபாலி.. எதுக்காக திருடிட்டு வீடு பூராவும் கையெழுத்து போட்டு
வெச்சிட்டு வந்தே?"
"சார்.. கையெழுத்து போட பழகிட்டேன். அதுக்கப்புறக் எதுக்காக கைரேகையை விட்டுட்டு வரனும்?"

7.வாத்தியார் : உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான்.
அவனை எழுப்பிவிடு.
மாணவன் : அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?

No comments: