Tuesday, March 2, 2010

கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா

1.என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.


2.என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்


3.ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.

4.சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Machine லவெச்சா washing சோடாவாகுமா? 5.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

6.என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


7.ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

8.ஒரு காப்பி எவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். அது XEROX காப்பிடா

9.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


10.நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.


11.தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?தெரியலையே .. .. என்னது ?தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !

No comments: