Thursday, October 20, 2011

கடிக்கலாம் வாங்க

1.எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?


2.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.


3.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.


4.அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.


5. ஒருவர்:: மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
மற்றவர்: டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.


6.1008 வேலை இருந்தாலும் உங்களுக்கு 1 sms
அனுப்புவதில் உள்ள சுகம் இருக்கே ஐயோ ஐயோ
அது msg`ல சொன்ன புரியாது.
Rs.100 Recharge பண்ணி விடுங்க Call பண்ணி சொல்றேன்.


7.ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?
மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே,அதனாலேதான்


8.பூனை குறுக்கே போனால் நல்லதா, கெட்டதா? :))
அது நீ மனுசானா இல்லை எலியாங்கிறதைப் பொறுத்தது :))


9.என்னை சின்னப்பிள்ளையிலே எல்லாரும் செல்லமா கன்னுக்குட்டி.., கன்னுக்குட்டினு கூப்பிட்டாங்க.
இப்போ
தடிமாடுன்னு கூப்பிடறாங்க


10.முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும். (தத்துவம்…)

No comments: