Thursday, July 28, 2011

Riddles of Alphabet

Q: What letter of the alphabet is an insect?
A: B. (bee)

Q: What letter is a part of the head?
A: I. (eye)

Q: What letter is a drink?
A: T. (tea)

Q: What letter is a body of water?
A: C. (sea)

Q: What letter is a pronoun like "you"?
A: The letter " I "

Q: What letter is a vegetable?
A: P. (pea)

Q: What letter is an exclamation?
A: O. (oh!)

Q: What letter is a European bird?
A: J. (Jay)

Q: What letter is looking for causes ?
A: Y. (why)

Q: What four letters frighten a thief?
A: O.I.C.U. (Oh I see you!)

Q: What comes once in a minute, twice in a moment but not once in a thousand years?
A: The letter "m".

Q: Why is the letter "T" like an island ?
A: Because it is in the middle of waTer.

Q: In what way can the letter "A" help a deaf lady?
A: It can make "her" "hear.

Q: Which is the loudest vowel?
A: The letter "I". It is always in the midst of noise

Q: What way are the letter "A" and "noon" alike?
A: Both of them are in the middle of the "day".

Q: Why is "U" the happiest letter?
A: Because it is in the middle of "fun".

Q: What word of only three syllables contains 26 letters?
A: Alphabet = (26 letters)

Q: What relatives are dependent on "you"?
A: Aunt, uncle, cousin. They all need "U".

Q: What is the end of everything?
A: The letter "g".

Wednesday, July 20, 2011

குசும்புகள்

1.அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

2.நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னு தான் சொன்னேன். அவர் கேட்கல சார்

3.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

4.அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

5.தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி ‘மானிட்டர்’னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...

6.அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..

7.அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?


8.ஏன் டாக்டர் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிட்டு தண்ணீ குடிக்கச் சொல்றீங்க..?
எங்காவது லீக் ஆகுதுன்னா பார்க்கத்தான்..!

9.கபாலி , எதுக்காக நீயும் உன் மனைவியும் சேர்ந்து போய் திருடினீங்க..?

அதை விடுங்க ஜட்ஜய்யா…எங்க கெமிஸ்ட்ரி எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க…!


10.தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?

வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.


11. வாத்தியாரு: தம்பி, இந்த பறவையோட காலப் பாரு. இதோட பேரு என்ன? ன்னு கேட்டாரு.
நம்ம ஆளு யோசிக்கவே இல்ல. டக்குன்னு சொன்னான், தெரியாது சார் ..ன்னு
வாத்தியாருக்கு கோவம் வந்துச்சி. பையன நல்ல திட்டி முடிச்சிட்டு ‘
உன் பேரு என்ன’ன்னு கேட்டாரு.
நம்ம இளவட்ட பையன் உஷாருல்ல.
என்னோட கால பாருங்க, பேர தெரிஞ்சிக்கங்கன்னு சொல்லிட்டான்.

Sunday, July 10, 2011

வாய்விட்டு சிரித்தால்

1.அந்த ” டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்
ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த “ ரிபோர்ட் “ இருக்கு அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்


2.மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....


3.என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!"
"ஐயையோ!
அப்படியெல்லாம் வளர்க்காதீங்க...
நல்ல பையனா வளர்க்கப் பாருங்க


4. A man asks a trainer in the gym: "I want to impress the girl, which machine can I use?"
The trainer replied; “Use the ATM outside the gym!!!"


5."டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"


6.கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?


7. Nurse: Doctor, Doctor, there's an invisible man in the waiting room!
Doctor: Well, go in there and tell him I can't see him!!


8.Teacher : இரண்டம் உலகப் போர் ஏன் நடந்தது?
Student : முதலாம் உலகப் போர் சரியாய் நடக்கல அதனால்தான்!
Teacher : ?....?!!...


9.என் பொ‌ண்டா‌ட்டிய என் தா‌ன் செ‌ய்றது?
ஏன் என்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.


10.ஒருவர் கார் ஒன்றை ஓடிக்கொண்டு சென்றார் அந்த கார்
வழியில் ஆயில் இல்லாத காரணத்தால் நின்று விட்டது .
அதற்க்கு அவர் சத்தமாக சிரித்தார் ஏன் தெரியுமா?
வாய்விட்டு சிரித்தால் ஆயில் கூடுமாம்.

Sunday, July 3, 2011

சிரிக்க முடிஞ்சா சந்தோசம்

1.அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


2.மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..


3.உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,


4.போர்க்களத்தில் கொசுவலை:
நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....
.நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?

.ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?

நண்பர்: ..............


5.பாட்டி…இந்தா இந்த பலூனை ஊதிக் கொடு…!
-
போடா..வயாசாச்சு…என்னாலே முடியாது..!
-
அப்பாதான் சொன்னாங்க…’பாட்டி, சின்ன விஷயத்தைக்கூட
ஊதி ஊதி பெரிசாக்கிடுவா’னு…!

6.ஆசிரியர்:- மாணவர்களே நானும் உங்களில் ஒருவன். என்னை
வேறு படுத்திப பார்க்க வேண்டாம்…!
-
மாணவன்:- சரிடா மச்சி! கீழே உட்காரு…!

7.வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு, பாம்பாட்டியை கூட்டிட்டு
வந்து அடிச்சோம்..!
-
அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு, பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?


--
Thanks for
Mr.H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com