Thursday, October 16, 2014

Nice ஜோக்ஸ் 18

1.  டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
     எந்த பாட்டுக்கு?

 
2.டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

 
3.காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?


4.குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!


5.இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

 
6.சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி..
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

 
7.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே  பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

 

8"என்னது உங்க பேர் "நல்ல காலமா?"
ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு "நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க

9.மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

10.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?

 
11.ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

 
12."ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
"இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"


13.வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!
ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்...?


14.நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
"போகும் போது டாக்டர் ...?"
"வெறும் பாக்கெட்டோட போகலாம்!"

 

 

Thursday, September 25, 2014

மிஸ்டர் எக்ஸ் ஜோக்ஸ்:


1. மிஸ்டர் எக்ஸ் இருவருக்கும் வழியில் 2 குண்டுகள் கிடைத்தன.
மிஸ்டர் எக்ஸ் 1 - ஏய் வா, போலீஸ் கிட்ட போய் குடுத்துட்டு வருவோம்.
மிஸ்டர் எக்ஸ் 2 - வழியில ஏதாவது ஒண்ணு வெடிச்சிடுச்சுன்னா?
மிஸ்டர் எக்ஸ் 1 - போலீஸ் கிட்ட பொய் சொல்லிடுவோம் ஒண்ணுதான் கிடைச்சதுன்னு.


2 . (ஜெயிலில்) உன்னை நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்குல போடப்போறோம்.
ஹா ஹா ஹா
எதுக்கு சிரிக்கற?
நான் எழுந்துக்கறதே 9 மணிக்குத்தானே?


 3 . ஒரு ஆள்: ரொம்ப வெய்யில் தாங்க முடியலேன்னா என்ன செய்வீங்க?
போய் AC முன்னாடி உக்காருவேன்.
அப்பயும் முடியலேன்னா?
AC ஐ on பண்ணுவேன்.


4. மிஸ்டர் எக்ஸ் 1 : எதுக்கு ஓட்டைக் குடையை எடுத்துட்டு வந்திருக்கீங்க?
மிஸ்டர் எக்ஸ் 2 : இல்லேன்னா மழை நின்னுடுச்சுன்னா எப்படித் தெரியும்?


5. ஒருதடவை மிஸ்டர் எக்ஸ் இந்திய தேசியக்கொடி வாங்க கடைக்குப் போனார். அவர் கேட்ட கேள்விக்கு கடைக்காரர் மயக்கம் போட்டு விழாத குறைதான். அவர் கேட்டது 'இதுல வேற எதுனா கலர் இருந்தா காமிங்க'.

 
 6. இன்னிக்கு தண்ணீரை நான் ஏமாத்திட்டேன்.
எப்படி?
குளிக்கறதுக்காக சூடு பண்ணிட்டு பச்சைத் தண்ணில குளிச்சுட்டேன்.


 7. மனைவியிடம்: உனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா நான் பைத்தியம் ஆயிடுவேன்.
இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டீங்களா?
பைத்தியத்துக்கு என்ன, எது வேணும்னாலும் செய்யும்.


8. எதுக்கு மிஸ்டர் எக்ஸ் butter ஐ ஜன்னல் வழியா தூக்கிப்போடறாரு?
butterfly பாக்கத்தான்.

Nice ஜோக்ஸ் 17

1. கண்டக்டர்: "விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்க போய்க்கிட்டே இருக்கே?''
டிரைவர்: "இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்க போய்க்கிட்டே இருக்குதே!''


2. "மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
 "அது.... குருவி!"


3.ஒருவர்: பொய் சொன்னாக் கண்டுபிடிக்க ஒரு எந்திரம் இருக்காமே? உங்களுக்குத் தெரியுமா?
நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்நண்பர்: தெரியுமாவாவது? நான் அதைத்தானே கல்யாணம் செஞ்சிருக்கேன்


4.பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."
வீட்டுக்காரம்மா: " பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."

5(கல்யாண மண்டபம்)
"வாங்க.. வாங்க..! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா? பொண்ணு வீட்டுக்காரரா..?"
"ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!"


6.ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." "ஏன்..?" "பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.
 

7. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.
காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?
காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!


8 . ஒரு ஆளு ஒரு காக்கா வளர்த்தானாம், அந்த காக்காவ தொட்டா ரொம்ப ஸாப்ட்டா இருக்குமாம் , அவன் அதுக்கு என்ன பேர் வைப்பான்?
?
?
MY CROW SOFT


9 . ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.


10 . ford ன்னா என்ன?
வண்டி
oxford ன்னா?
காளைமாட்டு வண்டி.

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...


சிட்டிசன்:

கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

: தெரியாதே...

நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

..................................................


காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

..................................................


சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

..................................................


ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damil பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

..................................................


கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

..................................................


திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(
முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(
இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(
மூன்றாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

..................................................


நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

..................................................


ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

..................................................

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

..................................................

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???

--