Sunday, February 20, 2011

சூப்பர் கடி ஜோக்ஸ்

1.வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு?
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

2.தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி?
கொட்டுமே!

3.மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!

4.என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

5.உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது 'ஈஸி' சேராச்சே!

6.உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக...


7.என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான்
நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

8. முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9.லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...
எப்பூடி?

10.Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but the thought of long life will never come.

11.Why do couples hold hands during their wedding?
It's a formality just like two boxers shaking hands before the fight begins!

12.If u r married please ignore this msg,
for everyone else: Happy Independence Day.

Wednesday, February 16, 2011

சிரிப்பு வருது சிரிப்பு வருது

1.ஜோதிடர்: உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
கஸ்டமர் : எது பல்லா !?

2.பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

3.மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

4.மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து
சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல
இருக்கான்னாவது சொல்லுங்க!

5.நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

6.உங்க கதை ஏன் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வருது?
இது செக்குமாடு பற்றிய கதையாச்சே!”


7.ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
குப்பை சார்!


8.கண் பார்வை ரொம்பக் குறைஞ்சிப் போச்சி டாக்டர்.
யாரைப் பார்த்தாலும் முகம் சரியா தெரிய மாட்டேங்குது.
அப்படின்னா கழுத்து வரைக்கும்தான் சரியா தெரியுதா?


9.நான் வீட்டில் இருந்தேன்னா எனக்கு நேரம் போறதே தெரியாது.
ஏன்… அவ்வளவு ஜாலியா இருக்குமா?
இல்லை. எங்க வீட்டில் கடிகாரமே இல்லை.


10.டாக்டரும்,பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

11.உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .