Monday, November 1, 2010

காமெடி நேரம் 1

1.வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

2.பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!

3.நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

4.கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்

5.வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

6.பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

7.மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

8.ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்

9.பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே .

10.மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் : எனக்கு மறந்து போச்சு
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

11.பேரன் : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
தாத்தா : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
பேரன் : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.


12.குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

13.வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

14.எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

No comments: