Tuesday, July 20, 2010

காமெடி நேரம்

1.சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.

2.உங்க பையனை ஏன் எல்லோரும் மா வீரன்னு கூப்பிடறாங்க?
மா மரத்தைப் பார்த்தா மாங்கா அடிக்காம வரவே மாட்டான்.


3.பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப்
பிய்ச்சுக் குடுத்துட்டுத்தான் குடுத்துட்டு தான்தின்பேன்
நல்ல "பன் " பாடுதான்.

4 .லெட்டர்ல நிற்கன்னு எழுதாதிங்க .
ஏன்?
படிகிறவங்களுக்கு கால் வலிக்கும்.

5.நீ எந்த சிகரட்டை பிடிப்பாய்?
மற்றவங்க கொடுப்பதை .

6.இன்டர்வியுவில் :என்னப்பா நாற்காலியை எடுத்துகிட்டு போறே?
நீங்கதானே சார் ,டேக் யுவர் சீட்-ன்னு சொன்னிங்க!

7.அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டு கொண்டு இருக்கிறான் தெரியும்மா?
தெரியலே
வெறும் பனியனை மட்டும் போட்டு கொண்டு ஆபீஸ்க்கு வர கூடாது என்று தான்.

8.எல்லா மொழிகளையும் பேச கூடியது எது ?
எதிரொலி.

9.இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச்
காவிரியில விழுந்துடுச்சு.ஆனா இன்னும் ஓடிகிட்டு இருக்கு.
வாட்சா ?
இல்ல காவேரி .

10.ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி பிரிப்பார்?
சாப்பட்டுக்கு முன்பு சாப்பட்டுக்கு பின்பு

11.நீதிபதி :பட்டப் பகல்லே ஏன் திருடினே ?
திருடன் :தொழிலுன்னு வந்துட்ட ராத்திரி பகலுன்னு பார்க்க முடியுமா எஜமான் ?

12.ஆசிரியர் :உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலே மேடம் !
அம்மா :அவனுக்கு பொய் சொல்ல தெரியாது சார் !

13.ஆசிரியர்:5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு ?
மாணவன்:5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார் .

No comments: