Monday, February 4, 2013

Nice ஜோக்ஸ் 13

1. குதிரை.....வரிக்குதிரை ....
இரண்டுக்கும் ஆங்கிலத்தில் என்ன தெரியுமா?
ரூல்டு ஹார்ஸ் (ROOLED HORSE ) என்றால் வரிக்குதிரை.
அன்ரூல்டு ஹார்ஸ் ( UNROOLED HORSE ) என்றால் குதிரை.


2-TAIL (டெய்ல்) அப்படின்னா "வால்" என்று தமிழ் அர்த்தம்.
TAILOR (
டெய்லர்)என்றால் "வாலுப்பையன்",என்று தமிழ் அர்த்தம்.


3-
அம்மா ,,,,பெரியம்மா....சின்னம்மா.
இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில்,
MUM
என்றால் "அம்மா",
MAXIMUM
என்றால் "பெரியம்மா",
MINIMUM
என்றால் "சின்னம்மா".
என்று சொல்லனும்..


 
4-SIX PACK BODY .....
என ஆங்கிலத்தில் சொல்லுவாங்க.அப்படின்னா,
"
ஆறடி மண்ணுல புதையைப்போற உடம்பு" அப்டின்னு தமிழ் அர்த்தம்.

 
5.வாழ்க்கையில நாம தப்பு பண்ணிட்டா
கண்ண மூடி பத்து நிமிஷம் யோசிக்கணும்
அப்பத்தான், யார் மேல பழியப் போடலாம்னு மனசு சொல்லும்!


6. "பாய் வியாபாரத்தில் கூட்டு வேணான்னு சொன்னேனே கேட்டியா?"
"என்னாச்சு?"
"பார்ட்னர் எல்லாத்தையும் சுருட்டிட்டு ஓடிட்டான்."

 
7. என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார் டாக்டர்...!"
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு போவட்டும்!"


8. என்னப்பா சர்வர் இன்னிக்கி என்ன ஸ்பெஷல்
கொஞ்சம் இருங்க சார் கேட்டு சொல்றேன்
என்ன கேக்கப் போறேப்பா?
ஒண்ணும் இல்லை எந்த ஐட்டம் மீந்திருக்குன்னு கேக்கப் போறேன். அதை வச்சுத்தான் ஸ்பெஷல் தயார் பண்ணுவாங்க!


9. இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க"
"
எப்படி சொல்ற?"
"
பாருங்க!குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்களா?"
"
நாசமா போச்சு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ"
 
 
10.பார்க் ஹோட்டல்லே கிராண்ட் ஒரு பார்ட்டி நடக்கப் போகுது
ஆஹா ஆஹா!
இன்னும் சொல்லி முடிக்கலை. மிச்சத்தையும் கேளுங்க. அவங்க அவங்க பணத்தோட வந்து சாப்பிட்டுக்கலாம்!