Sunday, May 15, 2011

ஜோரான ஜோக்ஸ்

1.நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


2.வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!
இப்ப நம்பிறீங்களா...?


3.OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?
சதிஷ் : சாரி சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்

4."டாக்டர் உங்களை ஓட்டலில் எதுவும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாராமே...?" "ஆமாம்! அதனால்தான் ஓட்டலிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து வீட்டில வைத்துச் சாப்பிடுறேன்...!"


5.இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க...." "அல்வா தருவாங்க."


6."தலைவரை 'உங்கள் வீட்டுப் பிள்ளை'ன்னு சொன்னது தப்பாப் போச்சா.... ஏன்?" "எல்லார் வீட்டுலயும் போய் செலவுக்கு 'பாக்கெட் மணி' கேக்கறார்...!"


7."தலைவரை ஏன் மேடையில வச்சு எல்லோரும் இப்படி அடிக்கறாங்க...?" "ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு 'ஓடுகாலி'ன்னு பட்டம் கொடுத்தாராம்...!"


8.மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
கணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகலாம்…
மனைவி:!!!!!


9.What do you get if you cross pigs with a lot of grapes?
A swine gut!


10. Who tells chicken jokes?
Comedihens!

Saturday, May 14, 2011

பிச்சை Jokes

1.வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...


2.ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...


3.பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...?



4.பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....


5.கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.


6.பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.



7.பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.