Tuesday, August 10, 2010

அறுவை ஜோக்ஸ் 3

1. கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும்..அது
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!.
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது.
சந்தோஷம்"!!

2. வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா
எப்படி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

3.சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம்
செய்யப் போறேன்.

4.ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

5.டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.

6.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

7.ஆசிரியர் கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.

8.உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

9. பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா ஏன்டா அப்படி சொல்ற
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.

10.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.

11.என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!

12.ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் டன் அப்போ 3000 கிலோ கிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
ஆசிரியர் :....?????....

அறுவை ஜோக்ஸ் 2

1.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீங்க
ஆபீஸ்லேயா? வீட்லேயா?

2.தாத்தா: இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?

3.மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.

4.படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்சில உட்காருந்து வசனம் பேசிக்கிட்டு இருக்காரே...
ஏன்?
"அவரு பெஞ்ச் டயலாக் பேசுறாராம்...

5.என்னங்க இது கல்யாண மண்டபத்துல பெண்ணை காணோம் தேடிகிட்டு இருகாங்க
நன் தான் அப்பவே சொன்னேனே... பெண் இருக்கிற இடமே தெரியாதுன்னு.

6.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"

7.இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ?
ஏன் கேக்குறிங்க ?
போர்ட்ல அளவு சாப்பாடுன்னு எழுதாம , "களவு சாப்பாடு" - ன்னு எழுதியிருகாங்களே!

8.தலைவருக்கு வந்திருகிறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே ??
"அரசியல் ஒரு சாக்கடை-ன்னு அவர் தான் அடிக்கடி சொல்றாரே "

9.நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.


10.கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...

11.ஏன் சார் முறைக்கிறீங்க? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே
ஆமா
அதான் எலுமிச்சையும் அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்.

12.இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.