Tuesday, December 20, 2011

ஜோக்ஸ் N ஜோக்ஸ்

1.ஏர்டெல் மொபைல் வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.


2.டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்..?"
"இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..!"


‎3. "எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"


‎4."எல்லா விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்கணும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சுக்கிட்டாரா... எப்படி?"
"ஏழுமலைங்கிற தன்னோட பேரை, "நாலுமலை"ன்னு மாத்திக்கிட்டாரு!"


5.டிரைவர்! இவ்வளவு வேகமாகக் காரை ஓட்டாதே. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீங்க முதலாளி வேகமாகப் போகும் போது என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.


6.காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.


7.உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!


8.அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!


9.ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்

10.டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்'
என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?'
அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்'


11. வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"
பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"
வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


12.சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்......
அடடா,,,,,,அப்புறம்......
மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு.......


13.பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி
உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.

No comments: