1."வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"
2.பாரதி : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
மாலதி : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?
3.பாலு : படகுல ஏறி பார்க்கலாமா?
வேலு : முடியாதே! ஏரியிலதான் படகைப் பார்க்கலாம்.
4.பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: இது இராயப்போட்டையா?
இல்லை தோள்பட்டை.
5.உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
6.எனக்கு லேட் மேரேஜ்!
காலங்கடந்த வயசிலே கல்யாணமா?
அப்படியில்ல, பத்து மணிக்கு நடக்கவேண்டிய மேரேஜ் பத்தரை மணிக்கு நடந்துச்சு!
7.ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
8.இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
நான்கு!
இல்லை / 22.
9.என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
10. 22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
ரோட்ல தான்!
No comments:
Post a Comment