1.சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
அதுக்கென்ன இப்போ..
ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே..அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
2.திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே ! என்ன ஆச்சி?
கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க !
3.சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
4.(மேடையில் ஒரு அரசியல்வாதி)
நீலக் கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே..! அரசு யோசிக்குமா..?
5.(ரேஷன் கடையில்)
என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!?
6.ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
7.சார் ! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் ! ! வீட்டுக்கு வரலாமா ?
ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !
8.அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
ஏன் ?
எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !
9.அரசன் : புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?
புலவர் : மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!
10. நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்.
11.உங்க கடை இட்லி பஞ்ச மாதிரி இருக்கே எப்படி?
பருத்திக்கொட்டையை ஆட்டி மாவு சுடுறோம்.
No comments:
Post a Comment