1.அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.
2.நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னு தான் சொன்னேன். அவர் கேட்கல சார்
3.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
4.அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...
5.தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி ‘மானிட்டர்’னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...
6.அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..
7.அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?
8.ஏன் டாக்டர் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிட்டு தண்ணீ குடிக்கச் சொல்றீங்க..?
எங்காவது லீக் ஆகுதுன்னா பார்க்கத்தான்..!
9.கபாலி , எதுக்காக நீயும் உன் மனைவியும் சேர்ந்து போய் திருடினீங்க..?
அதை விடுங்க ஜட்ஜய்யா…எங்க கெமிஸ்ட்ரி எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க…!
10.தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?
வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.
11. வாத்தியாரு: தம்பி, இந்த பறவையோட காலப் பாரு. இதோட பேரு என்ன? ன்னு கேட்டாரு.
நம்ம ஆளு யோசிக்கவே இல்ல. டக்குன்னு சொன்னான், தெரியாது சார் ..ன்னு
வாத்தியாருக்கு கோவம் வந்துச்சி. பையன நல்ல திட்டி முடிச்சிட்டு ‘
உன் பேரு என்ன’ன்னு கேட்டாரு.
நம்ம இளவட்ட பையன் உஷாருல்ல.
என்னோட கால பாருங்க, பேர தெரிஞ்சிக்கங்கன்னு சொல்லிட்டான்.
No comments:
Post a Comment