1.வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...
2.ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...
3.பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...?
4.பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....
5.கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.
6.பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.
7.பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.
No comments:
Post a Comment