Friday, July 20, 2012

Nice ஜோக்ஸ் 3

1.உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!


2.ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!


3.நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?


4.நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?


5.கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?


6.ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'


7.அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?


8.நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!


9.கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?


10.வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!!

Tuesday, July 10, 2012

Nice ஜோக்ஸ் 2

1.மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?
வேலைக்கு வந்தவர்: ஒன்று..
மேனேஜர்: ஒன்றா.. எப்படி?
வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.


2.அந்த பொண்ணு ரொம்ப அடக்க ஒடுக்கமான பொண்ணா இருக்கலாம்.. அதுக்காக குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக் காட்டுறது கொஞ்சங்கூட நல்லாயில்ல!


3.டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!" "தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும். தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க."


4.டாக்டர்: நான்தான் உங்களுக்கு கால் ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர்! நோயாளி: அப்ப மீதி முக்கால் ஆபரேஷனை யார் பண்ணுவாங்க?


5.ஃபிளவருக்கும் லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?" "ஃபிளவர் வாடிப்போயிடும் லவ்வர் ஓடிப்போயிடும்!


6.வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?" "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.


January 20
7. Two boys were arguing when the teacher entered the room.
The teacher says, "Why are you arguing?"

One boy answers, "We found a ten dollor bill and decided to give it to whoever tells the biggest lie."

"You should be ashamed of yourselves," said the teacher, "When I was your age I didn't even know what a lie was."

The boys gave the ten dollars to the teacher.


8.BUS: B reak U nder S topping
COLD: C hronic O bstructive L ung D isease
JOKE: J oy O f K ids E ntertainment
AIM: A mbition I n M ind
DATE: D ay A nd T ime E volution
EAT: E nergy A nd T aste
TEA: T aste & E nergy A dmitted
PEN: P ower E nriched in N ib
NYLON: N ew Y ork LON don (manufacturing place)
SMILE: S weet M emories I n L ips E xpression
BYE: B e with Y ou E very-time…:-)


9.Man1: என்ன sir, car tank -க open பண்ணிட்டு சிரிகிறீங்க ...?
Man2: ஒண்ணுமில்ல மனசுவிட்டு சிரிச்ச “OIL”கூடுமாம்
சொன்னங்க அதான்...


10.இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா?" "அது காட்டாது! நாம்தான் பார்க்கவேண்டும்"

Saturday, July 7, 2012

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பசுக்கு திருமணம் ஆகியிருந்தால்….?

ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

என்ன கண்டுபிடிக்க போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறம் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க?

Monday, July 2, 2012

Sunday, July 1, 2012

Nice ஜோக்ஸ் 1

1.காலேஜ் படிக்கிறப்ப கேட்டுக்கு வெளியே நின்னா சஸ்பெண்டு'ன்னு அர்த்தம்,கல்யாணமானதுக்கப்புறம் வீட்டுக்கு வெளிய நின்னா ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்.


2.காலம் என்பது ரஜினி படம் மாதிரி தானா ஒடிடும் ......
வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி நாம தான் ஓட்டனும்


3.என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,
கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது…
சங்கு ஊதிவிட்டுதான் கிளம்பணும்...-::))


4.மாணவன் 1 : ''எனக்கு எக்ஸாம்ல ஒரு கேள்விக்கும் பதில் தெரியல. வெறும் பேப்பரை மடிச்சிக்கொடுத்துட்டு வந்துட்டேன்."
மாணவன் 2 : "எனக்கும் பதில் தெரியாம, நானும் வெறும் பேப்பரை தான் மாயா கொடுத்துட்டு வந்தேன்..."
மாணவன் 1 : "அடப்பாவி..டீச்சர் பார்த்தா ரெண்டு பேரும் காப்பி அடிச்சோம்னு நினைக்கப் போறாங்க"


5.கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.


6.நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.


7.அதிகமா Weight தூக்குர பூச்சி எது தெரியுமா?
தெரியலையா?
மூட்டைப்பூச்சி ...............!!!!!!!!!!!!!!!!


8.ஆப்பிள் அழுது கொண்டு இருக்கிறது
வாழைப்பழம்: ஏன் அழுகிறாய்?
ஆப்பிள்: எல்லாரும் என்னை கட் பண்ணி சாப்பிடுறாங்க!!
வாழைப்பழம்: நீ பரவாயில்லை. என்னை எல்லாரும் என்னோட டிரஸ்ஸ அவிழ்த்துவிட்டு சாப்பிடுறாங்க!!


9.Man1:இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.
Dr: அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?
Man1:எந்த வியாதி டாக்டர்?


10.மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி தாங்க
அப்பா : கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்திருக்கிறார்?
மகன் : ஒன்னு கியர் போட ஒன்னு பிரேக் பிடிக்க