Thursday, January 13, 2011

அறுவை ஜோக்ஸ்

1டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு
பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம்
கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.


கல்யாண உடை
---------------
2.சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?''

''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''

''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?''

''??????''


3.கோபு : வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,
"ORDINARY கோழி"க்கு எத்தனை கால் ?.
சோமு : 2 கால்கள்தான் !.
கோபு : 10 கால்கள் !.
சோமு : எப்படி ?.
......
.
.
.
.
.
கோபு : ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே !?.


4.ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.


5.ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?
………………
இது கூட தெரியலையா?
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.
இப்படித்தான் அறிவு ஜீவியா இருக்கணும்.


6.ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?
நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.


7.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.


8.ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
.மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.



9.குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா...


10.வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.


11.மிகவும் மக்கான ஊர் எது?
மாமண்டூர்.


12. Which is the laziest mountain in the world?
Mount” Everest “.

Tuesday, January 11, 2011

நகைச்சுவையும் கடியும்

1.Test’-க்கும்
‘Quiz’-க்கும்
என்ன வித்தியாசம்??
‘Test’-ல - Answer தெரிஞ்ச Pass, ‘Quiz’-la - Answer தெரியலே-ந்தான் Pass

2.Teacher: படித்து முடிச்சதற்க்கு அப்புறம் என்ன பண்ணலாம் என்று இருக்கீங்க?
Student: Book'கை மூடி வைக்கலாம் என்று இருக்கேன்.

3.இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே...
ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..


4.தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

5.எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?

6.கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

7.Man : சுவாமிஜி உலகம் என் இப்படி சுத்துது …?
Swamiji : ஒரு quarter தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது ,
3 quarter தண்ணி இருக்குற உலகம் என்ன சுத்தக் கூடாதா ?


8. "ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

9."விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"
"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

10.டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சச்சினின் மனைவியும் மகனும் பேசிக்கொண்டது;
அம்மா... பாரும்மா.....அப்பா சிக்ஸர் சிக்ஸரா விளாசித் தள்ளுறார் .
நல்லாப் பாருடா ! அது மேட்ச் இல்ல ; பூஸ்ட் விளம்பரம்.