Tuesday, July 20, 2010

காமெடி நேரம்

1.சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.

2.உங்க பையனை ஏன் எல்லோரும் மா வீரன்னு கூப்பிடறாங்க?
மா மரத்தைப் பார்த்தா மாங்கா அடிக்காம வரவே மாட்டான்.


3.பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப்
பிய்ச்சுக் குடுத்துட்டுத்தான் குடுத்துட்டு தான்தின்பேன்
நல்ல "பன் " பாடுதான்.

4 .லெட்டர்ல நிற்கன்னு எழுதாதிங்க .
ஏன்?
படிகிறவங்களுக்கு கால் வலிக்கும்.

5.நீ எந்த சிகரட்டை பிடிப்பாய்?
மற்றவங்க கொடுப்பதை .

6.இன்டர்வியுவில் :என்னப்பா நாற்காலியை எடுத்துகிட்டு போறே?
நீங்கதானே சார் ,டேக் யுவர் சீட்-ன்னு சொன்னிங்க!

7.அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டு கொண்டு இருக்கிறான் தெரியும்மா?
தெரியலே
வெறும் பனியனை மட்டும் போட்டு கொண்டு ஆபீஸ்க்கு வர கூடாது என்று தான்.

8.எல்லா மொழிகளையும் பேச கூடியது எது ?
எதிரொலி.

9.இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச்
காவிரியில விழுந்துடுச்சு.ஆனா இன்னும் ஓடிகிட்டு இருக்கு.
வாட்சா ?
இல்ல காவேரி .

10.ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி பிரிப்பார்?
சாப்பட்டுக்கு முன்பு சாப்பட்டுக்கு பின்பு

11.நீதிபதி :பட்டப் பகல்லே ஏன் திருடினே ?
திருடன் :தொழிலுன்னு வந்துட்ட ராத்திரி பகலுன்னு பார்க்க முடியுமா எஜமான் ?

12.ஆசிரியர் :உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலே மேடம் !
அம்மா :அவனுக்கு பொய் சொல்ல தெரியாது சார் !

13.ஆசிரியர்:5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு ?
மாணவன்:5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார் .

Sunday, July 18, 2010

கடி டைம்

1.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு

2.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்


3.இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
ஏன்??
பாவம், பேய் பயந்திரும்!!


4.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே...
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.



5.ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா
மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..


6.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?



7.எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


8.யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்து விட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். Think Differently !!


9.இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!


10.அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


11.ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும்
எதிர் வீட்டு மாடு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


12.அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும்
எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!

நன்றி : இப்னு ஹம்துன் (ஹ.ஃபக்ருத்தீன்)